Wednesday, August 19, 2020

அருட்தந்தை அருட்காப்பு

அருட்தந்தை அவர்களின் இளமை பயணம், அவ்வளவு எளிமையானதல்ல.

பல தடைகளை அழகாக துணிவோடு தன்னுணர்வோடு கடந்து வந்தவர்.

பெருமளவு ஜவுளி உற்பத்தி செய்து, செல்வந்தராக வாழ்ந்த போதும் சரி, அத்தனையும் இழந்து நின்ற போதும் சரி, தன்னிலை மறவாமல் துணிவோடு தன் இலக்கை நோக்கி வாழ்ந்தவர்.

அவர் சிறப்போடு வாழ்ந்த போது, அவரோடு பழகிய  ஒரு அம்மையார் சில வருடம் கழிந்து அவரை சந்திக்க வந்த போது, அனைத்தையும் இழந்து, எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து மனம் கலங்கி கண்வடித்தார்.

அவருக்கு ஆறுதல் கூறும்போது... கலங்காதீர்கள். என் உடமைகள் என்று நான் நினைத்தவை, இப்போது வேறிடத்தில் உள்ளது. இடம் மாறி உள்ளது. 
அவ்வளவுதான் " என்று மென்மையாக கூறினார்.

தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்ட போது, என் கடன் தொல்லை எல்லாம் போக வேண்டும் என்று தியானம் செய்யும்போது, சங்கல்பம் கூறினார்.

பிரபஞ்ச பேராற்றல் அவர் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது. கடன் தொல்லை தீர்ந்தது. ஆனால் அவர் மிக எளிமையான வாழ்கைக்கு மாற வேண்டி இருந்தது.

அந்த அனுபவம், அவரை சிந்திக்க வைத்தது.

கடன் தொல்லை மட்டும் தீர வேண்டும் என்று பிரார்தித்ததால், கடன் தொல்லை தீர்ந்தது. மற்ற வாழ்வின் வளங்களை நாம் கேட்கவில்லையே என்ற தீர்க்கமான சிந்தனையின் விளைவே இப்போது நாம் அனுதினமும் கூறும்சங்கற்பம்.

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்.

அருட்காப்பும் இந்த தொடர் ஞான சிந்தனையின் விளைவே.

இறையாய், குருவாய், வழியாய், காப்பாய்.

No comments:

Post a Comment