Wednesday, November 27, 2019

கருட புராணம் - புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்

கருட புராணம் - புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்
குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை சிசு,
மூன்று வயது வரையில் பாலகன்,

ஆறு வயது வரையில் குமரன்,

ஒன்பது வயது வரையில் பவுண்டகன் எனப்படும்.

பதினாறு வயது வரையில் கைசோரன் எனப்படுவான்.

மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும் உதக கும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

மூன்று வயதுக்குள் இறக்கும் குழந்தையைப் புதைக்க வேண்டும்.

24 ஆவது மாதம் முடிந்து 25ஆவது மாதம் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளை எரிக்கவேண்டும்.

ஐந்து வயது முடிந்து பூணூல் அணிந்திருந்தாலும், இல்லா விட்டாலும் இறந்தவனுக்குப் பத்து நாட்களுக்கும் பிண்டம் போட வேண்டும்

. 5 முதல் 12, (அ) 12 நிரம்பியவர் மரித்தால் விருக்ஷாற்சனம் செய்ய வேண்டும். ஆனால், சபிண்டீகரணம் செய்யலாகாது.

புத்திரனுக்குத் தந்தையும், தந்தைக்குப் புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும்.

பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு தருப்பையுடன் ஏகோதிஷ்டம் போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறு ஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான்.

நல்ல புத்திரனையும் பெறுவான்.

பெரும்பாலான பிள்ளைகள் தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றனர்.

தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அமிசங்களில் ஏதேனும் ஒன்று தனயனுக்கும் பொருந்தும்.

ஒருவன் தனக்குத் தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைக் கண்ணால் பார்த்துவிட்டால் அந்த ஜன்மத்தில் புத் என்னும் நரகத்தை ஆன்மாவில் காணமாட்டான்.

மணம் புரிந்துகொண்ட ஒருவன் ஒருத்திக்கே புத்திரன் பிறந்தால் அவன் குலத்தில் பிதிர்த் தேவர்கள் எல்லாம் மிக்க மகிழ்ச்சி அடைவர்.

தந்தைக்கு ஈமக்கடன்களைத் தலைச்சனே அதாவது முதல் மகனே செய்யக் கடமைப்பட்டவன் ஆவான்.

மற்ற புத்திரர்கள் இருந்தால் அவர்கள் தகப்பனுக்கு சிவகர்மங்களையும், சிரார்த்தாதிகளைச் செய்யக் கடவராவர்.

ஒருவன் தனக்குப் பௌத்திரன் பிறந்து அவனை எடுத்துப் பார்த்த பிறகே மரித்தால் நல்லுலகை அடைவான்.

கொள்ளுப் பேரனைப் பார்த்தவன் அதைவிட நல்லுலகை அடைவான்.

பெண்ணுக்கு விலை கொடாமல் கன்னிகாதானம் செய்து கொடுக்க அவளை மணம் புரிந்து, புத்திரனைப் பெற்றால், அந்தப் புத்திரன், காமக் கிழத்தியின் மகன் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம், தானங்கள் செய்யலாம்.

சற்புத்திரர்கள் தீர்த்தயாத்திரைச் செய்யலாம். அன்னரூபமாயும், ஆமரூபமாயும், ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தம் செய்யலாம்.
தொடரும்...

Monday, November 4, 2019

சில ஐதீகம்

விளக்கில்லாத கோயிலில் வழிபாடு செய்யகூடாது மணியின்றி பூஜை செய்ய கூடாது கோயில் திரை மூடி இருந்தால் வணங்ககூடாது பலிபீடம் கொடிமரம் ,ஆகிய இடத்தில் மட்டுமே விழுந்து கும்பிடவேண்டும் கோயிலில் அபிசேக காலத்தில் வளம் வர கூடாது கோயிலில் கோபுர நிழல்,கொடிமர நிழல் மிதிக்க கூடாது சண்டிகேஸ்வரர் முன் கைகளை தட்டகூடாது மாடி உச்சியின் மீதோ, மரக்கிளை மீதோ இருந்து கொண்டு சாமி தரிசனம் செய்யகூடாது பவளசரத்தை குழந்தைகள் அணிந்தால் நோய், தீய சக்தியிலிருந்து விடுபடலாம் பணி நீரை சேகரித்து குடித்து வர சகல நோய்களும் தேறும் பன்னிரண்டு வயத்துக்கு பின் தான் கரும வினைகள் பாதிக்கும் தலைக்கு மேல் இரு கைகளாக் கும்பிட்டால் மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி பெருகும் பச்சை நிறம் கவர்சிகரமான பிராண சக்தியை குறிக்கும் தன முகத்தை தானே தியானம் செய்தது வந்தால் மனதின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும் பெயரில் பூ ,ஆறுகள் ,அர்த்தமில்லாத சொல் இருப்பதை தவிர்க்க வேண்டும் பெயரில் திலகம், புண்ணியம் ,போன்ற சொல் இருந்தால் இல்லறவாழ்வு சிறக்காது தாடை அழகாக இருந்தால் கௌரவமான தொழில் செய்வார் நெற்றியில் வெட்டுக்காயம் இருந்தால் காதல் திருமணம் ஏற்படும் தாடையில் வெட்டுகாயமோ, தழும்போ இருந்தால் தொழிலில் பிரச்சனை இருக்கும் அழகிய பல் உடையவன் மனைவி மீது அன்பாக இருப்பான் சொத்தை பல் அல்லது பல் வலி உடையவர் தொழிலில் பல பிரச்சனை இருக்கும் விகாரமான பல் உடையவர் விசித்திரமான தொழிலை செய்வார் இடது கண் துடித்தாள் தாய்க்கு நோய் வரும் கோயிலின் கோபுரம் விட வீட்டின் உயரம் குறைவாக இருக்கவேண்டும் சரீர உணர்சியுடன் சாமியை தரிசனம் காணக்கூடாது பெருமாள் ஏதிரே நின்று கும்பிடக்கூடாது கோயிலின் திருநீறு,குங்குமம்,பூ, போன்றவற்றை கீழே சிந்த கூடாது பெருமாள் கோயிலுக்கு சென்றால் துளசி, தீர்த்தம் ,சடாரி வாங்கிகொண்டுதான் வரவேண்டும் காது இடுக்கு புஸ்பம் வைக்ககூடாது துளசி தளத்தை தலையில் வைக்ககூடாது ஈர உடை,ஒருடையுடனும்,ஆடையில்லாமலும் சாமி கும்பிட கூடாது கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் போதுமானது சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும் சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துகொள்ளகூடாது தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக்கூடாது துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்துச்செல்லக்கூடாது. வலது கண் துடித்தாள் தந்தைக்கு பாதிப்பு வீட்டில் ஈசான்ய மூளை குடும்ப தலைவரை குறிக்கும் நெற்றி சிறிதாக இருந்தால் காதல் வயபடுவார்கள் வீட்டில் பூஜை அரை சிறிதாக இருந்தால் வீட்டு தலைவர் சிரமத்தில் இருப்பார் அமிர்திஸ்ட் கல் உங்களிடம் இருந்தால் நற்பலன்கள் கிடைக்கும் அமிர்திஸ்டை செவ்வந்திகல் லட்சுமிகல் என்றும் தமிழகத்தில் அழைப்பார்கள் செவ்வந்தி பொழுதின் நிறத்தை பிரதிபலிக்கிறது இதனை வைத்து இருப்பவர்களுக்கு செல்வ செழிப்பை தருகிறது இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும். காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது சுத்தமானஇடத்தில் தான் ஜபிக்கவேண்டும். கற்பூர ஹாரத்தி - சூடம்காண்பித்தல் பற்றி .. சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும் முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்கவேண்டும். தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக்கொள்வதும் கூடாது திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும் அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது .. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது ) கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது . நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது

Friday, October 25, 2019

ஶ்ரீ மகாலட்சுமி தாயாரின் வழிபாடு முறையும் பலன்களும்

ஶ்ரீ மகாலட்சுமி தாயாரின் வழிபாடு முறையும் பலன்களும்

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.

2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.

4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.

5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

9. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.

14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.

15. நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.

17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.

20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.

21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.

22. லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.

23. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.

24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.

25. லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.

26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.

27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.

28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.

29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.

31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.

32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.

34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.

36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.

37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.

38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.

39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.

40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.

41. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.

42. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

43. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

44. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.

45. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

46. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.

47. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.

48. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.

49. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.

50. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது

Thursday, October 17, 2019

பித்ரு கடன்

ஸ்வாமி பிதுர்தர்பணம் செய்ய முடியாமல் செய்யாமல் பலர் நம் ஶ்ரீவைணவத்தில் உள்ளனர் அவர்கள் நல்ல பணமுடையவர்களாக வீடு வாசல் என நலமாக உள்ளனர் ஆனால் பிதுர் தர்ப்பணம் செய்யும் பலர் பரம ஏழையாகவோ அல்லது நடுத்தரமானவராகவோ தானே உள்ளனர் இப்படியிருக்க பிதுர் தர்ப்பணம் அவசியமா?

அடியேன் தாஸன்

கேள்வி சரியானதாக தெரிந்தாலும் அடியேன் சொல்வது ஒன்று உண்டு அதற்க்கு முன் ஒரு சிறு விளக்கம்

ஸ்ரீபித்ரு தேவதாப்யோ நமோ நம:

பெற்றோர்களை நாம் அவர்களின் வயதான காலத்தில் காப்பதற்கு பெயர் கடமை அதையே அவர்கள் காலமானவுடன் அவர்களுக்கு நாம் செய்வதற்கு பெயர் கடன் அதாவது
பித்ரு கடன்

பிதுர் கடனை நாம் முறையாக செலுத்தவில்லை என்றால் எப்படி நாம் வங்கியில் அல்லது வெளியில் ஒருவரிடம் கடன் வாங்கிய பின் பணத்த்தை கட்ட மறந்து இறந்து போனால் அது எப்படி வட்டி மேல் வட்டியாக சேர்ந்து நம் சந்ததிகள் தலையில் விழுமோ

அது போல் பித்ருக்களுக்கு நாம் செய்யும் பித்ரு கர்மாக்கள்தான் பெற்றவர்களுக்கு நாம் திருப்பி செலுத்தும் நன்றிகடன் அதுவே தான் நம் சந்ததியருக்கு நாம் கொடுத்து செல்லும் பிக்ஸட் டெபாஸிட் போல் அதை செய்ய மறந்தால் மறுத்தால் அதனால் பாதிக்கப்பட போவதும் குழந்தைகளே சந்ததிகளே

பித்ருக்களுக்கு ஓரு வருடத்திற்கு தொன்னூற்றாரு நாட்கள் பசியெடுக்கும் நாட்கள் ஆகையால் ஓரு வருடத்திற்கு தொன்னூற்றாறு நாட்கள்  தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது அதற்கு ஷண்ணவதி சிரார்த்தம் அல்லது தர்ப்பணம் என்று பெயர்

நம்மில் பலர் பழக்கத்தின் காரணமாக பன்னிரண்டுமாத தர்ப்பணங்கள் வழக்கமில்லை வருடத்தில் நான்கு  மாதம் தான் தர்ப்பணம் வழக்கம் என்று கூறுகிறார்கள் அது அவர்கள் தவறில்லை புரிதலில் வந்ததவறு

பொதுவாக இன்றய காலகட்டத்தில் இல்லத்திலோ கல்யாணம் மற்றும் விசேட நாட்களில் பலர் சாப்பிடும் விஷயத்தில்  வழக்கமில்லாததை எல்லாம் செய்து சாப்பிடுவதை காண்கிறோம்

நம்மை பகவத் கிருபையால் பெற்று வளர்த்து இன்று நாம் வாழும் வாழ்க்கை மற்றும் சாப்பாட்டிற்கு மூலகாரணமான இருந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதில் மட்டும் பலவற்றை வழக்கம் இல்லை என்று ஏன் வைத்துள்ளார்கள்  என்று தெரியவில்லை

பிரதி வருடம் நம்முடைய தாய் தந்தை சிரார்த்த திதியன்று ஏதோ ஒரு வகையில் சிரார்த்தம் செய்யாமல் கோயிலிலோ மடத்திலோ ஏதாவது ஒரு அனாதை ஆசிரமம் முதியோர் இல்லம் போன்றவைகளில் சிறப்பாக பணத்தைக்கட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தாலும் அந்த காரியம் அன்னதானம் என்ற புண்ணியம் அக்கௌன்டிற்கு போகுமே தவிர பித்ருக்களின் சிரார்த்த அக்கௌன்டிற்கு போகாது

இன்னும் சொல்ல போனால் சிரார்த்தத்திற்கு ஒரு பதினைந்து நாட்கள் முன்பே நம் பித்ருக்கள் நம் இல்லத்திற்க்கு வந்துவிடுவதால் அந்த பித்ரு பஷத்தில் கூடுமானவரை
சிரார்த்தம் முடிந்த மறுநாள் வரை வீட்டில் சிரார்த்த கறிகாய்களே தளிகையில் சேர்க்க வேண்டும்

வெங்காயம் பூண்டு முருங்கை கத்திரி முதலிவைகளை தளிகையில் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும் 

இன்னும் சொல்லப்போனால் முகசவரம் கூட செய்துகொள்ள கூடாது காரணம் அதற்கு பித்ருதீஷை என்றுபெயர்

சிரார்தங்களை முறையாக செய்வதன் மூலம் செய்பவரின் குடும்பத்திற்க்கு அவர்களின் பித்ருக்கள் ப்ரீதியடைந்து மனம் குளிர்ந்து அனுக்ரஹம் செய்வார்கள் குடும்பத்தில் கூடுமானவரை ஒரு குறையும் இருக்காது

இப்போது தேவரின் கேள்விக்கு வருகிறேன்

தர்ப்பணம் சிரார்த்தம் என முறையாக செய்யாதவர்களிடம் பணம் வசதி இருக்கலாம் அது அவர்களது தாத்தா இவர்களுக்கு செய்த சொத்து அதே நேரம் இவர்களது செயல்களின் தாக்கத்தால்

அவர்கள் வீட்டில் அமைதி இராது ஒன்று குழந்தைகள் இராது குழந்தைகள் இருந்தாலும் சண்டை மணவாழ்க்கையில் பிரச்சனை ஏன் பல வீடுகளில் குழந்தைகள் டைவர்ஸ் அல்லது மனப்பிறழ்வு கருக்கலைப்பு பதவியில் பிரச்சனை என்றோ ஏற்பட்டு அல்லது

பணம் இருந்தும் ஒழுங்காக உண்ண உறங்காமுடியாமல் பல விதமான மன உலைச்சல்களில் நிம்மதி இன்றி வெளியில் மட்டும் சிரித்தவாறே இருப்பர்

பணம் வசதி என பார்த்தால் அது புண்பட்ட உடலில் போட்ட சட்டை போல் ஆனால் உடலில் உள்ள புண்ணின் எரிச்சல் பாதிப்பு அதை அனுபவிக்கும் பாதிக்க பட்டவனுக்கு
மட்டுமே தெரியும் பார்பபவனுக்கு தெரியாது ( இதை தான் பட்டால் தான் தெரியும் பாப்பானுக்கு ( அதாவது பார்க்கிறவனுக்கு) என நம்மை பற்றி தவறாக கூற பயன்படுத்துகின்றனர்)

நாம் செய்யும் தவறு நம் சந்ததிகளை பேரன் பேத்திகளை ( அந்த பாக்கியம் கிடைத்தால்) மிகவும் பாதிக்கும்  அல்லது குடும்பத்தில் பெண்களை பிள்ளைகளை அமைதியாக வாழவிடாது என்னதான் பணம் வசதி இருந்தாலும்

ஏன் இதெல்லாம் செய்பவர்களுக்கு வரதா என்றால் கூடுமானவரை வராது இன்று நம்மில் பலர் குழந்தை பருவத்தில் கஷ்டபட்டவர்களாக இருந்தாலும் இன்று நல்ல நிலைமையில் இருக்க காரணம் சென்ற தலைமுறையினர் தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற காரியங்களை முறையாக செய்ததன் பலன் நாம் இன்று கல்வி நல்லவேலை வசதி என வாழ்கிறோம் இது நிரந்தரமாக நம் குடும்பத்தில் தங்கி இருக்க வேண்டுமானால் நாமும் பிதுர்கர்மா தர்ப்பணம் சிரார்தம் முதலியன செய்யனும்

பலர் பிறவியிலேயே வசதியாக பிறந்தும் தற்சமயம் பசிக்கு உணவு கிட்டாமல் சிரம்ப்படுவதும் முன்னோர் செய்ய தவறிய கடன்களின் பாதிப்பே

நாம் செய்யும் தவறு பேரன் பேத்திகளை அல்லது குழந்தைகளை பாதிக்கும் போது பரிகாரம் என பணத்தை கொட்டி கொடுத்தாலும் சரியாகாது

பகவத் கடன் செலுத்தவில்லை என்றால் பரவாயில்லை காரணம் பகவான் நம்மை வெறும் கையுடன் தான் ( கர்மாவை நாமே கொண்டுவருகிறோம்) அனுப்புகிறான் வெறும் கையுடன் தான் கூட்டி செல்கிறான்

ஆனால் இன்று நம்மை பெற்றவர்களுக்கு செய்ய தவறிய கர்மா இப்பிறவியில் மட்டுமல்ல மறுபிறவியிலும் நம் கூட வந்தே நம்மை படுத்தும் ( அடுத்த பிறவியை பற்றி இப்பவே ஏன் கவலைப்படும் இருப்பதை அனுபவிப்போம் என்பவர்களை பற்றி அடியேன் ஒன்றும் சொல்ல முடியாது)

உறுதியாக சொல்லுகிறேன் நாம் ( பிராமணர்கள்) பலவிதங்களில் நம் முன்னோர்கள் கடைபிடித்த பல தினசரி பகவத் பாகவத ஆசாரிய பிதுர் கடமைகளை முறையாக செய்யாததே இன்றய பருவகால மாற்றத்துக்கு மூலகாரணம்

பணம் வசதி மட்டும் ஒரு சிறந்த வாழ்க்கையல்ல ஒரு சுனாமி ஒரு புயல் வெள்ளம் போதும் அந்த நிலமையே மாறிவிடும்

பிதுர் காரியம் பகவத் பாகவத ஆராதனம் செய்பவர்களை அப்போதும் அவர்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்

கடமையை செய் என்பது தான். பகவான் கூற்று பலன் அவனிஷ்டம்

எனவே செய்யுங்கள் கேள்வி வேண்டாம்