Sunday, June 25, 2017

குளிக்கும்முறையில் உள்ள ரகசியங்கள்

நிராடும் முறைகளில் உள்ள அபூர்வ ரகசியங்கள்:

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.

(கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.

*குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள்.*

*அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.*

*அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும்.* உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.
தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.

அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.

துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.

உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

*பிறருடன் வாய்_திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம்.*
மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

🌻🌻 குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.

🌻🌻 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை. அதை உணரவேண்டும்.
குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள்.

ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.

நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது

நட்சத்திரத்திற்க்கு உகந்த நல்ல நாட்கள்

சந்திர  பலம்  உள்ள  நாட்கள்

எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள்.

           நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

       நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.
பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.
நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.

Tuesday, June 20, 2017

தினமும் நலம் பெற

காலையில் எழுந்திருக்கும் போது

அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது :-
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது :-
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில்
செல்லும் போது :-
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது :-
தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது :-
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது :-
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது :-
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது :-
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது :-
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது :-
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது :-
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

நாமீயை விட நாமத்துக்கே
ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
"ஹரிர் ஹரி ஹரிர் ஹரி"என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
"கேசவா"என்று சொல்ல வேண்டும். "கேசவா" என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
"கோவிந்தா"என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
"மாதவா"என்று கூற வேண்டும்.

செல்வம் குறைவதின் அறிகுறிகள்

செல்வம் குறைவதின் அறிகுறிகள் :-

1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.

2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.

3. தலைமுடி தரையில் உலாவருவது.

4. ஒற்றடைகள் சேருவது.

5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது.

6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.

6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

7. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
சுவற்றில் ஈரம் தங்குவது.

9. செல் (கரையான்) சேருவது.

9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.

9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.

10. உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.

11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.

12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.

13. மெல்லிசை கேட்காமல்
சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.

14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.

15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.

16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.

17.பெண்கள் புடவை முந்தி(முந்தானை)தொங்க விட்டு இடுப்பில் சொருகாமல் இருப்பது.

18.தலைமுடியாமல் விரித்த கோலத்தில் இருப்பது.

19.தலைவாசல் சாணம் தெளித்து கோலமிடாமல் இருப்பது.
இவற்றை தவிர்த்து, வளமுடன் வாழ்க வளர்க.

மந்திரத்தின் பலன்கள்


கிழக்கு நோக்கி இருக்கும் சிவனின் மந்திரமாக"'நமசிவாய'" வைக் கூறுகின்றார்.

"'நமசிவாய '" என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும்.

"'நமசிவாய ஊம் நமசிவாய'" என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.

"'நமசிவயங் செலகை நமசிவாய'" என மந்திரம் உச்சரித்தால் அறுபத்தி நான்கு பாஷானங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.

"'நமசிவாயம் லங்க நமசிவாய'" என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.

"'சவ்வும் நமசிவாய நமா'" என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.

"'ஶ்ரீயும் நமசிவாய நமா'" என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.

"'ஊங்கிறியும் நமசிவாய நமா'" என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.

"'அலங்கே நமசிவாய நமோ'" என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.

"'வநம சிவாய'" என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.

"'ஓம் நமசிவாய'" என்று செபித்தால் காலனை வெல்லலாம்.

"'லங்கிரியும் நமசிவாய'" என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.

"'ஓங்கிறியும் ஓம் நமசிவாய'" என்று சொல்லி வந்தால் வாணிபங்கள் நன்றாய் நடக்கும்.

"'ஓங் ஊங் சிவாய நம உங்நமா'" என்ற மந்திரத்தை உச்சரித்தால் பதினெட்டு வகையான குட்டமும் தீரும்.

"'லீங் க்ஷும் சிவாயநம'" என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.

"'லூங் ஓங் நமசிவாய'" என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.

"'ஓங் அங்கிஷ சிவாய நமா'" என்று ஓதினால் பூமியெங்கும் சஞ்சாரம் செய்யலாம்.

"'அங் சிவாய நம'" என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

"'அங் உங் வங் சிவாய நம'" என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.

"'ஹம் ஹம் சிவாய நமா'" என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.

"'ஓம் நமசிவாய நமா'" என்ற மந்திரத்தை செபித்தால் பூத கூட்டங்கள் வசமாகும், துஷ்ட தேவதைகள் அழியும்.

"'சிலியும் நம சிவாய'" என்ற மந்திரத்தை உச்சரித்தால் மன்னர்கள் வசியம் ஏற்படும்.

இவையெல்லாம் தத் புருஷம் இருபத்தைந்தாம்.
கரூரார் பூஜா விதிகள். சிதம்பர அஷ்ட கர்ம மந்திரங்கள்.

வில்வம், அத்தி ஆகியவற்றின் சமித்துகளால் தற்புருஷ மந்திர ஜபம் ஜபித்து ஆயிரத்தெட்டு முறை ஹோமம் செய்தால் காரிய சித்தியாகும். பிரம்மஹத்தி முதலிய பாவங்கள் நீங்கும்.

சிவ சிவ

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்

நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு. சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.

நவ சமித்துகள், நவ தானியங்கள் :

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலைநவக்ரஹ ஹோம சமித்துகள்எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானதுதுளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்ததுஅத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்ததுநாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்ததுபலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்ததுஅரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்ததுவன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்ததுஅருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்ததுமாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினிதாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானதுமாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.

சமித்து குச்சிகளும் பலன்களும்:

அத்திக் குச்சி : மக்கட்பேறு.

நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை

அரசங் குச்சி : அரசாங்க நன்மை

கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.

புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி

வில்வக் குச்சி : செல்வம் சேரும்

அருகம்புல் : விஷபயம் நீங்கும்.

ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்.

வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.
வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகியஅஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி காடாட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.

அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.

தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

கோவிலுக்கு செல்வதால்

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்!*
*இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்!!*
*********************************************************************
*1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.*

*2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.*

*3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.*

*4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.*

*5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.*

*6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..*

*7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.*

*8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.*

*9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.*

*10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.*

*11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..*

*12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக் ஆகும்*

*13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்கும்*

*14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.*

*15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.*

*16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.*
*நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.*

*17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.*

*18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.*

*19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..*

*20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.*

*இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம்*
*குழந்தைகளையும் பழக்குவோம்.*

*அது அறிவியல் ஆகட்டும்...எதுவாகட்டும்...இறை சக்தி நம்மை காக்கட்டும்....*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*
    
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*

                            *