Friday, September 27, 2019

யார்_யார்_இந்த #தர்ப்பணம்_செய்வது_நல்லது

#யார்_யார்_இந்த #தர்ப்பணம்_செய்வது_நல்லது..?
☘☘☘☘☘☘☘☘
ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் ?

2.பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் ?

3.முதலில் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் ?

4.பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா ?

ஏன் நாம் இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு முதலில் நாம் சில தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.

உலகில் எத்தனை சமயங்கள் இருந்தாலும் நம்முடைய சித்தர்கள் தந்த சைவ நூல்களில் சொல்லப்பட்ட தகவலை போல எந்த நூலிகளிலும் தெளிவுபட சொல்லப்பட்டது இல்லை என்றே சொல்லவேண்டும். நாம் சரியாக கோணத்தில் புரிந்து கொள்ளாமல் புனையப்பட்ட தகவல்களினால் நமது நூல்களை தவிர்த்து நம் சில துன்பங்களை சந்திக்கிறோம்.

பரமாத்மாவிடம் பிரிந்த உயிர்கள் பத்தினி என்னும் புவியில் உழன்று மீண்டும் பரமாத்மாவிடம் சேரவேண்டும் என்பது விதி. இது வினையின் பயனாக பிறவிகள் தரப்பட்டு அதிலும் உச்சப்பட்ட பிறவியாக மனித பிறவி தரப்பட்டு புவியில் பிறக்கிறோம்.

மனிதனாக பிறந்து செய்த பாப புண்ணிய வினைகளினால் நாம் ஆவி உலகம் என்னும் புவியின் முதல் அடுக்கான கருமையான இருள் உலகத்தில் அடையப்பட்டு தவிப்போம் என்றும் நம்முடைய உடலில் இருந்து வந்தவர்கள் அல்லது நம்மளுடைய ரத்த சம்மதம் பட்ட உயிர்கள் சூரியனை நோக்கி பூமி நெருங்கும் நாளில் இருளில் அடையப்பட்ட உயிர்களிளுக்கு சிரார்த்தம் என்று எள்ளு நீரை கட்டை விரலில் இறைப்பதால் அவர்கள் அதை பருகி தன்னுடைய பசியை தீர்த்து கொள்வார்கள் என்று கருடருக்கு நாராயண மூர்த்தி சொன்னதாக கருடர் ரிஷிகளுக்கு சொன்ன புராணத்தில் உள்ளது.

சங்கல்பம் செய்து சிரார்த்தம் செய்ய வேதம் படித்தவர்களுக்க
ு மட்டும் தெரியும் நமக்கு ஒத்துவராது என்று நாம் தவிர்த்ததாலும் சித்தர்கள் நமக்கு எளிமையாக அம்மாவாசை தினம் மட்டும் ஒரு பொழுது உணவு கொள்ளாமல் உச்சியில் சூரியன் பூமியின் மையத்தை கடந்த பின் இறந்தவர்களுக்கு பூசைகளும் படையலும் செய்து அவர்கள் பசியை தீர்த்து ஆசிகள் பெற்று கொள் என்று நமக்கு எளிமையான சிரார்த்த முறைகளை சொல்லியுள்ளார்கள் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
சிரார்த்தம்/தேவசம்/திதி கொடுப்பதினால் நம்முடைய உடலில் நோய்களின் தாக்கத்தை தடுக்கலாம், தடைகளாகும் சுபகாரியம்களை நிறைவாக செய்யலாம், குலத்தில் குழந்தை செல்வம் கிடைக்கும், குலதெய்வ ஆசிகள் கிடைக்கும், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்பதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
விண்ணில் உள்ள சூரியன் புவிக்கு கதிர்களை செலுத்தும் பொழுது அது உலகில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் தென்படுவதை போல ஒரு ஜீவ ஆத்மாவில் உண்டான பல உயிர்கள் ஆயினும் அவரவர் தனி தனியாக தங்கள், தான் வந்த ஆன்மாவுக்கு திதி என்னும் எள்ளு நீரை கட்டை விரலின் முலமாக தர வேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .

இறந்த முதல் வருடம் மட்டும் தலைச்சன் பிள்ளை வீடு அல்லது அவர் இறந்த வீட்டில் அவர் இறந்த திதி அன்று எல்லோரும் சேர்ந்து திதி தரவேண்டும், அடுத்த வருடம் அவரவர் தனியாக அவர்கள் வீட்டில் தேய் பிறையில் வரும் திதியில் தரவேண்டும் ……(இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும்)
பெண்களை மட்டும் பெற்றவர்கள் இறந்தால் மகளிடம் பிறந்த ஆண்பிள்ளை கொல்லி வைக்க வேண்டும் என்றும் முதல் வருடம் மட்டும் பெண்கள் திதி தரவேண்டும். பிறகு, வருடம் ஒரு முறை படையல் போட்டு பூசை செய்யலாம் என்று நூல்கள் சொல்கிறது .

தம்பதியர்களில் மனைவி முதலில் இறந்தால் கணவன் உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு திதி தரவேண்டும். கணவன் தவிர பிள்ளைகள் தர கூடாது என்றும், தந்தை இறந்த பிறகு, இருவருக்கும் தந்தையின் இறந்த திதி அன்று ஒன்றாக இருவருக்கும் சேர்த்து பிள்ளைகள் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது…(இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும்)

தாய்க்கு, தந்தைக்கு என்று தனித்தனியாக திதி கொடுக்க கூடாது, தாய் இறந்த முதல் வருடம் மட்டும் தனியாக கொடுத்து விட்டு மறுமுறை தந்தையுடன் சேர்த்து ஒன்றாக தான் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது …..

முறையான சிரார்த்தம்களை கடைபிடித்து வாழ்வில் வளம்பெறுவோமாக.

அம்மன் அணிகலன்கள் ! பெண்கள் ! சிறப்பு

*அம்மன் அணிகலன்கள் ! பெண்கள் ! சிறப்பு ..!!!* 

*பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?*

கோயிலில் உள்ள அம்மனுக்கு பட்டுப்புடவை கட்டி மலர் மாலை சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தாலே அலங்காரம் முழுமையடையும்.

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

1.தாலி  தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

2. தோடு  எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

3. மூக்குத்தி  மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

4. வளையல்  கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

5. ஒட்டியாணம்  கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !

6. மோதிரம்  எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

*நகைகள் அணிவதன் சிறப்புகள்*

நகைகள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமான ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் வெப்பமான நாடுகளில் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.

தாலி : 

தாலி  (தங்கம் )எப்பொழுதும் நமது உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை  அதிகரிக்கும் ஆற்றலுள்ளது... 
 
கொலுசு: 

பொதுவாக எல்லா நகைகளையும்
தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். 
 
இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக *மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.*

மெட்டி: 

மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. 
 
வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

மோதிரம்: 

விரல்களில் அணியப்படும் மோதிரம் பதற்றத்தை குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.

அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது. 
 
மூக்குத்தி: 

மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட நவீன உலகில் முக்கியத்துவம் பெறுகிறது. 
 
பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது..

*அணிகலன் அணிவது ஆரோக்கியமே என்பது பாரம்பரிய பண்பாடு உணர்த்தும் உண்மை...!!!*

மூன்றாம் பிறை தரிசனம்

சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமா கும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாம் பிறை உருவான கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் .

தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு  அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர் களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

பலன்கள் :

அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.

நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது ?

ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார்.

மனம் வருந்திய சந்திரனோ,  தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண்டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார்,  ஆனால், மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.

நான்காம் பிறையைப் பார்த்ததால் வரும் கெடு பலனை எப்படித் தவிர்க்கலாம்? இதற்கும் புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வைப் பார்ப்போம். ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்து வீண்பழிக்கு ஆளானார் கண்ணன்.  இதற்குப் பரிகாரமாக, அடுத்த திங்களில் (அடுத்த மாதத்தில்) அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் செய்ததோடு கணபதியையும் வேண்டி பழியில் இருந்துவிடுபட்டார்.

காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.

திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

ஒவ்வொருவரும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்

ஒவ்வொருவரும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்

*நான்கு வகை உயிரினங்கள் :*

1. சுவேதஜம்

– புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம்

– பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன – மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம்

– முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.

4. ஜராயுதம்

– கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன், சில விலங்குகள் போன்றவை.

*ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் :*

1. கர்ணன்  (Karnan)
2. காளந்தி (Kalandhi)
3. சுக்ரீவன் (Sukriva)
4. தத்திய மகன் (Son of Thathiya)
5. சனி (Sani)
6. நாதன் (Nathan)
7. மனு (Manu)

*நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர் :*

1. சனகர் (Sanagar)
2. சனாதனர் (Sanadhanar)
3. சனந்தகர்  (Sanandhagar)
4. சனத்குமாரர் (Sanathkumarar)
5. வியாக்கிரபாதர்  (Viyakkirabhadhar)
6. பதஞ்சலி (Padhanjali)
7. சிவயோக முனிவர் (Shivayoga Munivar)

8. திருமூலர் (Thirumoolar)

*அஷ்ட பர்வதங்கள் :*

1. கயிலை (Kailai)
2. இமயம் (Himalaya)
3. ஏமகூடம் (Eamakoodam)
4. கந்தமாதனம் (Kandhamaadhanam)
5. நீலகிரி (Neelagiri)
6. நிமிடதம்  (Nimidadham)
7. மந்தரம் (Mantharam)
8. விந்தியமலை (Vindhaya Mount)

*ஆத்ம குணங்கள் :*

1. கருணை (Mercy)
2. பொறுமை (Patience)
3. பேராசையின்மை (without Greed)
4. பொறாமையின்மை (without Jealousy)
5. நல்லனவற்றில் பற்று [உறுதி] (persistence)
6. உலோபத்தன்மையின்மை  (Ulobathanmaiyinmai)
7. மனமகிழ்வு (Pleasure)

8. தூய்மை (Purity)

*எண்வகை மங்கலங்கள் :*

1. கண்ணாடி (Mirror)
2. கொடி (Flag)
3. சாமரம் (Samaram)
4. நிறைகுடம் (Full pot)
5. விளக்கு (Lamp)
6. முரசு (Drum)
7. ராஜசின்னம் (The royal symbol)
8. இணைக்கயல் (

*எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்* :

1. சந்தனம் (Sandal)
2. கோட்டம்
3. கஸ்தூரி (Musk)
4. கற்பூரம் (Camphor)
5. குங்குமம் (Vermilion)
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர் (Rhizome root)

*ஏழுவகைப் பிறப்புக்கள் :*

1. தேவர் (Deity)
2. மனிதர் (Human)
3. விலங்குகள்  (Animals)
4. பறப்பவை (Birds)
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம் (Plants)

*ஈரேழு உலகங்கள் – முதலில் மேல் உலகங்கள்:*

1. பூமி (Earth)
2. புவர்லோகம்
3. தபோலோகம்
4. சத்யலோகம்
5. ஜனோலோகம்
6. மஹர்லோகம்
7. சுவர்க்கலோகம்

*ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள் :*

1.அதலம்
2.கிதலம்
3.சுதலம்
4. இரசாதலம்
5. தவாதலம்
6. மகாதலம்
7.பாதாலம்.

*குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் :*

1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி

*அஷ்ட ஐஸ்வர்யங்கள் :*

1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்

*எண்வகை போகங்கள் :*

1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)

*நவ நாகங்கள் :*

1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3.அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி

*நன்மை தரக்கூடிய தச தானங்கள் :*

1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8.சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்

Tuesday, September 17, 2019

இறந்த பின் என்ன நடக்கிறது - தர்ம சாஸ்திரம்

ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று  நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது.

இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிது.

10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து  சாஸ்திரம் கூறுகிறது.
11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது.

13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது.

இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும்.

ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும்.

இவ்வாறு  12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும்.
இவ்வாறு  ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது.

உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு ஜீவன் பாவம்  செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது.

அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.

Thursday, September 12, 2019

பல நோய்களை தீர்க்கும் ஒரே மந்திரம் கூறிய அகத்தியப் பெருமான்

*பல நோய்களை தீர்க்கும் ஒரே மந்திரம் கூறிய அகத்தியப் பெருமான்,*

மனிதர்களுக்கு வரும் நோய்கள் குறித்தும், மனித உடல் பாகத்தை மையமாக வைத்து எத்தனை நோய்கள் வரும் என்பதையும் அகத்தியர் மிக அழகாக கூறியுள்ளார். அதன்படி நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் கூறியுள்ளார். 
ஆனால் அகத்தியர் கூறிய பல்வேறு மருந்துவ முறைகள் பாதுகாக்கப்படாமல் விட்டப்படியால் இன்னும் அவை பற்றிய குறிப்புகள் கிடைக்காமல் உள்ளது. தற்போது பல குறிப்புகளில் ஒரு சில மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கில் உள்ளது. 
கிடைத்த குறிப்புகளில் ஒரு சில மருத்துவக் குறிப்பு நெற்றியில் அணியும் திருநீரை மந்திர உரு ஏற்றினால் ஒரு சில நோய்கள் விலகும் என்று கூறியுள்ளார். 
அகத்தியர் அருளிய உடல்நோய்கள் அனைத் தையும் முற்றிலும் நீக்கும் இம்மந்திரத்தினை ஜெபித்து நோய்களினின்றும் விடுதலைப் பெற்று மகிழ்வுடன்வாழ்வோமே....... .
கணபதி மந்திரம் .
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற .
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு .
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று .
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று .
தாமப்பா நடனகண பதிதானொன்று .
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று .
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க் கேளு .
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே. .
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று .
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று .
நன்றான மூலகண பதிதானொன்று .
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க் .
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக் .
குறிப்புடனே சொல்லுகிறேன் .
குணமாய்க்கேளு .
நின்றாடு மூலமடா ஆதிமூலம் .
நிலையறிந்து .
ஓம்கிலி அங்உங்கெண்ணே .

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந் திரம் இருக்கிறது. அது .
"ஓம் கிலி அங் உங்" .
என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார். .

எண்ணமுடன் இடதுகையால் விபூதி வைத்து ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து சுத்தமுடன்

ஓம்கிலி அங்உங்

கென்று தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத் (208) தான் செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால் முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே. .
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும் .
கெடியான குன்மமுடன் காசந்தீரும் .
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும் .
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும் .
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம் .
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் .
வாங்கிப்போகும் .
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று .
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே. .
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான "உ" என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். .
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

நலங்கள் பல தரும் துளசி விரத வழிபாடு

*நலங்கள் பல தரும் துளசி விரத வழிபாடு*

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித் தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக் கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, விரதமிருந்து துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும். வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமர வைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.