Thursday, August 20, 2020

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்களில் இதுவும் ஒன்று? அந்தப் பொருளை ஏன் வைக்கக் கூடாது என்ற காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

*பொதுவாகவே, நம் வீட்டுப் பூஜை அறையில் எந்தெந்த தெய்வத்தின் திருவுருவப் படங்களை வைக்க வேண்டும், எந்தெந்த தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைக்கவே கூடாது, என்ற சந்தேகம் இன்னும் நம்முடைய மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. நம்முடைய வீட்டு பூஜை அறையை எப்படி அமைத்துக் கொண்டால், நம்முடைய வாழ்வு சிறப்பாக இருக்கும், நம் வீட்டு பூஜை அறையில் உள்ள திருவுருவப்படங்கள், உயிரோட்டத்தோடு இருக்க எப்படி பூஜை செய்ய வேண்டும், என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.*

*ஒருவருடைய வீட்டு பூஜை அறையில் உடைந்த சிலைகள், உடைந்த கண்ணாடியை கொண்ட, மிகவும் பழைய துருப்பிடித்த, திருவுருவப்படங்கள் கட்டாயம் இருக்கவே கூடாது. சரி, இந்த உடைந்த சிலைகளையும், உடைந்த சுவாமி படங்களையும், சரி செய்து விட்டு, அதன் பின்பு அந்த சிலைகளை, அதே திருவுருவப் படங்களை, மீண்டும் நம் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாமா? கட்டாயம் வைத்துக் கொள்ளலாம். உடைந்த படங்களை சரி செய்துவிட்டு, மீண்டும் நம் வீட்டில் அந்த படத்தை தாராளமாக வைத்து பூஜை செய்யலாம். உடைந்த சிலையை சரி செய்ய முடியும் என்றால், சரி செய்த சிலையை மீண்டும் பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை.*

*அடுத்ததாக, நிறைய பேருக்கு உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா, என்ற கேள்வி இன்றளவும் இருந்துதான் வருகின்றது. காளி, பிரத்தியங்கிராதேவி, உக்கிரமான நரசிங்க மூர்த்தி, இன்னும் பல கோபமான சுவாமி படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா? உங்களுக்கு நரசிம்மரையும், காளி தேவியையும் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய தீவிர பக்தர்கள் நீங்கள் என்றால், தாராளமாக அந்த தெய்வங்களை உங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது*

*எந்த தெய்வங்களும் நமக்கு கெடுதல் செய்வதற்காக அவதாரம் எடுக்கப்பட்டவை அல்ல. அவதாரத்தின் நோக்கம், கெடுதலை அழிக்க வேண்டும் என்பதால் தான், அந்த தெய்வங்கள் உக்கிர நிலையில் இருக்கின்றது. அந்த தெய்வங்களை பார்த்து வழிபடுவதன் மூலம், உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும், குழந்தைகளுக்கும், மனதில் எந்தவிதமான பயனும் ஏற்படாது, என்ற நிலை இருந்தால், தாராளமாக உங்கள் வீட்டு பூஜை அறையில் அந்த தெய்வங்களை வைத்து வழிபடலாம். அந்த தெய்வத்தின் திரு உருவப் படங்களை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம், கொஞ்சம் மன உறுத்தல் இருந்தால் கூட, அதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.*

*சனீஸ்வர பகவானின் திரு உருவப் படங்களையும், நவகிரகங்களின் திருவுருவப்படங்களையோ, நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது அவ்வளவு சரியான முறை அல்ல என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இவர்கள், இறைவனுடைய கட்டளைக்கு கீழ், பணிபுரியும் கிரகங்கள் என்பதால், இவர்களை கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டுமே போதுமானது என்று சொல்லப்பட்டுள்ளது. நவக்கிரகங்கள், சனீஸ்வர பகவானின் படத்தையும் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம்.*

*அடுத்ததாக, நம் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களின் திருவுருவப் படங்கள்! இறந்தவர்களை தெய்வமாக நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், தெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு சமமாக, இறந்தவர்களின் திருவுருவப் படங்களை வைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டின் பூஜை செய்யும் இடத்தை தவிர்த்து, மற்ற எந்த இடத்தில் வேண்டும் என்றாலும், இறந்தவர்களின் திரு உருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். இறந்தவர்களின் படத்தை வடக்குப்பார்த்த சுவற்றில் மாட்ட வேண்டும். அந்தப்படம் தெற்கே பார்த்தவாறு அமைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.*

*அடுத்ததாக, மிக முக்கியமாக சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் எந்திரங்களை பற்றித்தான். நிறைய பேர் வீட்டில் இப்போது எந்திரங்களை வைத்து வழிபட தொடங்கி உள்ளார்கள். இந்த பரிகாரத்திற்க்கு எந்திரம்! அந்த பரிகாரத்திற்கு எந்திரம்! என்று நல்ல முறைப்படி பூஜை செய்து எந்திரங்களை வாங்கி கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது என்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.*

*ஆனால், அந்த எந்திரங்களில் தெய்வங்களை பிரதிஷ்டை செய்தாலும், அந்த தெய்வங்கள் 12 ஆண்டுகள் மட்டும்தான், அந்த எந்திரத்தில், வாசம் செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது12 ஆண்டுகள் முடிந்ததும், அந்த எயந்திரத்தில் இறைவன் கட்டாயம் வசிப்பதில்லை! இதோடு மட்டுமா? தெய்வம் வெளியேறிய பின்பு, அந்த எயந்திரத்திற்குள் கெட்ட சக்தியானது வந்து குடி கொண்டுவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. (சில பேர் சொல்லி நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த எந்திரத்தை வைத்து, கொஞ்ச காலம் நாங்கள் நன்றாகத்தான் வாழ்ந்தோம். ஆனால், தற்சமயம் சூழ்நிலையே தலைகீழாக மாறிவிட்டது. சமீபகாலமாக தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்று! இதற்கு காரணமும், அவர்கள் வீட்டில் வைத்த, அந்த எந்திரத்தில் எதிர்மறை ஆற்றல் குடி கொண்டதால் கூட இருக்கலாம்.)*

*ஆகவே, எந்திரங்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாதவர்கள் யாரும், அதை வீட்டில் வைத்து வழிபடுவது என்பது அவ்வளவு சரியான முறை அல்ல. முடிந்தவரை வீட்டில் எந்திரங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும். கோவிலில் வசிக்கும் இறைவனே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்தால்தான், அந்த இடத்தில், அந்த சிலையில் இருப்பாராம். இல்லையென்றால் அந்த கோவிலின் தல விருட்சத்தில், அந்த இறைவன் சென்றுவிடுவார் என்பது ஐதீகம். மிகவும் பெரிய கோவில் என்றால் 24 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது தான் சரியான முறை. இதே சாஸ்திரம் தான் எந்திரங்களுக்கும்.*

*மேரு சக்கரம், ஸ்ரீ சக்கரம் போன்ற பொருட்களை உங்கள் வீட்டில் வாங்கி வைத்து இருந்தாலும், அதற்கான, முறையான வழிபாட்டை தினம்தோறும் செய்து ஆகவேண்டும். ஒரு பொருளை வைத்து நம் வீட்டு பூஜை அறையில், எப்படி பராமரிப்பது என்று தெரியாவிட்டால், தயவு செய்து அந்த பொருட்களை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வாங்கி வைக்காமல் இருப்பது தான் நல்லது.*

*அழகுக்காக, அலங்காரம் செய்வதற்காக வேண்டி, உங்களுக்கு அந்த பூஜை பொருள் மிகவும் பிடித்திருக்கிறது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது, என்ற காரணத்திற்காக எல்லாம், சக்கரங்கள், சங்கு, சாளக்கிராமம் போன்ற பொருட்களை வாங்கி சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதை முறையாக பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் நம் வீட்டில் இருக்கும் தெய்வத்தின் திரு உருவப் படங்களை போதுமானது.*

*உங்களுடைய வீட்டு பூஜை அறையில் இருக்கும் திருவுருவப் படங்களை சுத்தமாக துடைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, தினம் தோறும் புதிய பூக்களை சாத்தி, தீபம் ஏற்றி, தீப ஆராதனை காட்டி, உங்களால் முடிந்த மந்திரத்தை உச்சரித்து அல்லது மந்திரங்களை ஒலிக்க செய்து, முடிந்த நெய்வேதியத்தை படைத்து, குலதெய்வத்தை மனதார நினைத்து, உண்மையான பக்தியோடு, மன நிறைவோடு வழிபட்டாலே போதும். உங்கள் பூஜை அறையில் இருக்கும் இறைவன் உயிரோட்டத்தோடு இருப்பார், பக்தியோடு அந்த இறைவனின் திருவுருவப் படத்தில் உள்ள கண்களை பார்த்தாலே, அந்த கடவுள் உங்களிடம் உரையாடுவார்

Wednesday, August 19, 2020

அருட்தந்தை அருட்காப்பு

அருட்தந்தை அவர்களின் இளமை பயணம், அவ்வளவு எளிமையானதல்ல.

பல தடைகளை அழகாக துணிவோடு தன்னுணர்வோடு கடந்து வந்தவர்.

பெருமளவு ஜவுளி உற்பத்தி செய்து, செல்வந்தராக வாழ்ந்த போதும் சரி, அத்தனையும் இழந்து நின்ற போதும் சரி, தன்னிலை மறவாமல் துணிவோடு தன் இலக்கை நோக்கி வாழ்ந்தவர்.

அவர் சிறப்போடு வாழ்ந்த போது, அவரோடு பழகிய  ஒரு அம்மையார் சில வருடம் கழிந்து அவரை சந்திக்க வந்த போது, அனைத்தையும் இழந்து, எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து மனம் கலங்கி கண்வடித்தார்.

அவருக்கு ஆறுதல் கூறும்போது... கலங்காதீர்கள். என் உடமைகள் என்று நான் நினைத்தவை, இப்போது வேறிடத்தில் உள்ளது. இடம் மாறி உள்ளது. 
அவ்வளவுதான் " என்று மென்மையாக கூறினார்.

தொழிலில் பெரும் நெருக்கடி ஏற்பட்ட போது, என் கடன் தொல்லை எல்லாம் போக வேண்டும் என்று தியானம் செய்யும்போது, சங்கல்பம் கூறினார்.

பிரபஞ்ச பேராற்றல் அவர் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தது. கடன் தொல்லை தீர்ந்தது. ஆனால் அவர் மிக எளிமையான வாழ்கைக்கு மாற வேண்டி இருந்தது.

அந்த அனுபவம், அவரை சிந்திக்க வைத்தது.

கடன் தொல்லை மட்டும் தீர வேண்டும் என்று பிரார்தித்ததால், கடன் தொல்லை தீர்ந்தது. மற்ற வாழ்வின் வளங்களை நாம் கேட்கவில்லையே என்ற தீர்க்கமான சிந்தனையின் விளைவே இப்போது நாம் அனுதினமும் கூறும்சங்கற்பம்.

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்.

அருட்காப்பும் இந்த தொடர் ஞான சிந்தனையின் விளைவே.

இறையாய், குருவாய், வழியாய், காப்பாய்.

இறைவன் நாமம் உச்சரிப்பின் பலன்

தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர்.

அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன்,  பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியவில்லையே தவிர, பழக்கத்தினால் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு நடந்து செல்வான்.

கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை.

எப்படியோ ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி, நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான்.

காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது.

க்ருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். கண்ணும் தெரிடவில்லை. பொழுது போகவேண்டாமா?

அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது. வயதும் ஏறிக்கொண்டேயிருந்தது. பெருமை அறியாமல் சொன்னபோதும், நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜஸும் வந்துவிட்டது.

ஒரு நாள் சில வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இவரையும் இவரது ஒளி பொருந்திய முகத்தையும்  பார்த்ததும் விழுந்து வணங்கினர்.

யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால்,  க்ருஷ்ணா என்றார். 

ஸ்வாமி எங்களைக் காப்பாத்துங்க..

ஏம்பா, என்னைக் காப்பாத்தவே யாருமில்லன்னு நானே காட்டில் வந்து உக்காந்திருக்கேன். நான் எப்படி உங்களைக் காப்பாத்தறது?

ஸ்வாமி, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நாங்க பெரிய ஆபத்தில்‌ இருக்கோம். உங்களை விட்டா வேற வழி இல்லை.

என்ன ஆபத்து?

ஸ்வாமி, நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கறோம். ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபுக் குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரை எங்க பொறுப்பில் இருந்தது. திடீர்னு இன்னிக்கு காலைல அந்தக் குதிரை காணாமப் போச்சுது. அந்தக் குதிரையை இரவுக்குள் தேடிக்கண்டுபிடிச்சுக் கொண்டு வரலன்னா எங்க ரெங்க ரெண்டு பேர் தலையையும் வாங்கிடுவேன்னு உத்தரவு போட்டிருக்கார். நீங்கதான் காப்பாத்தணும்.

அதுக்கு நான்  என்ன பண்ணமுடியும்?

ஸ்வாமி, நாங்களும் காலைலேர்ந்து தேடிட்டோம். குதிரையைக் கண்டுபிடிக்க‌முடியல. நீங்க உங்க ஞான த்ருஷ்டியில் பார்த்துச் சொன்னா எங்க உயிர் தப்பிக்கும்.

சிரித்தார். ஏம்பா, எனக்கு ஊன த்ருஷ்டியே இல்லை. ஞான த்ருஷ்டிக்கு எங்க போவேன்?

ஸ்வாமி, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எப்படியாச்சும் சொல்லுங்க. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வின்னு தெரியுது.

இதென்னடா வம்பாப் போச்சு? 

தவித்தார் அவர். இருவரும் விடுவதாய் இல்லை. அவர்களிடமிருந்து விடுபட்டால் போதும். எதையாவது சொல்லி அனுப்பிவிடுவோம் என்று,

சரி, இங்கேயிருந்து நேரா கிழக்கால போங்க, அங்க ஒரு ஆலமரம் இருக்கும். அப்புறம் திரும்பி வடக்கே போனால், ஒரு குளம் வரும். குளக்கரையில் வேப்பமரம் இருக்கும். அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும். அந்தக் காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்துபோனா, உங்க குதிரை கிடைக்கும்‌ 

என்று வாயில் வந்ததையெல்லாம் சொன்னார்.

அவர்களும் சரி ஸ்வாமி, மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றனர்.

அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டு அதே வழியில் சென்றனர். பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது குதிரை மேய்ந்து கொண்டிருந்தது.

மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரமின்றி இரவுக்குள் அரசவைக்குப் போகலாம் என்று குதிரையை அழைத்துக்கொண்டு அரசனிடம் போனார்கள்.

குதிரை திரும்பக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தான் அரசன். 

எப்படிக் கிடைத்தது?

ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ஒழுங்காக உண்மையைச் சொல்லுங்கள்.

நீங்களே திருடி விற்கத் துணிந்தீரோ? தண்டனைக்கு பயந்து திரும்பிக் கொண்டுவந்தீரா?

இல்லை இல்லை அரசே..

என்று காட்டில் நடந்த விவரங்களைச் சொன்னார்கள்.

அரசனுக்கு மிகவும் ஆச்சரியம்.

நம்‌எல்லைக்குட்பட்ட காட்டில் இப்படி ஒரு மஹான் இருக்கிறார் என்றால் நாம் அவசியம் அவரை தரிசிக்க வேண்டும்.

சரி, நாளைக் காலை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றான் அரசன்.

மறுநாள் காலை வீரர்களோடு, அரசரும்,  பெரிய பரிவாரத்துடனும், வெகுமதிகளோஒடும் இந்தக் கண் தெரியதவர் முன் வந்தி நின்றனர்.

பயந்துபோனார் அவர்.

அரசன் அவரை விழுந்து விழுந்து வணங்கி குதிரை கிடைத்துவிட்டதையும் சொன்னதும்தான் அவருக்குச் சற்று நிம்மதியாயிற்று.

அவரை வற்புறுத்தித் தன்னுடனேயே அரண்மனையில் சிலகாலம் தங்குமாறு அழைத்துச் சென்றான்.

கூனிக் குறுகிப்போனார் அவர். வாயில் வந்ததையெல்லாம்‌ சொன்னதே பலித்துவிட்டதா?

இத்தகைய வாக்சித்தி எப்படி வந்தது?

வயிற்றுப் பிழைப்பிற்காகவும், பொழுதைப் போக்குவதற்காகவும் உன் நாமத்தைச் சொன்னதற்கே இவ்வளவு பலனா?

நிஜமாக உணர்ந்து சொன்னால்?

அழுதார்.

சிலநாட்கள் அரண்மனையில்  இருந்துவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி க்ருஷ்ணநாமத்தை உருகி உருகிப் பாடிக்கொண்டு அவர் வீதியில் நடந்தபோது, ஸ்ரீ வல்லபாசாரியார் அவரைத் தடுத்தாட்கொண்டு, க்ருஷ்ண மந்திரத்தை உபதேசம் செய்து, அவரது பூஜா மூர்த்தியான ஸ்ரீ நாத்ஜிக்கு தினமும் இரவு டோலோத்ஸவத்தில் பாடும் கைங்கர்யத்தைக் கொடுத்தார்.

கண் தெரியாத அந்த மஹான் சூர்தாஸர் ஆவார். 

அவர் பாடும்பொழுது கண்ணன் அவர் எதிரில் அமர்ந்து அவரது பாடல்களை ரசித்துக் கேட்பான்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !


Thursday, August 13, 2020

கோவிலில் மணி ஓசை

கோவிலில் மணி ஓசையை  இனி மறக்காதீங்க....!

#கோவில் #மணியில் #ஒளிந்துள்ள #ரகசியம்...!!

🔔 கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள்
கூறியிருக்கின்றனர்.

🔔 #பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சிலர் நினைப்பார்கள். 

🔔 ஆகம சாஸ்திரங்களின் படி, கோவில் மணியில் இருந்து வெளிப்படும் #ஓசை #எதிர்மறை #சக்திகளை #விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் #நேர்மறை #சக்தியை #அதிகரிக்க செய்கிறது.
கோவில் மணியின் ஓசை மனிதனின் மூளை செயல்திறனை மேலோங்க செய்கிறது என்று அறிவியலில் ஒரு பின்னணி இருக்கிறது.

🔔 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கும். அதற்கு கோவில் மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்கள் தான் காரணமாகும்.

🔔 கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.

🔔 அதனால் தான் கோவில் மணி சப்தம் கேட்கும்போதெல்லாம் ஒரு விதமான தனி உணர்வு கிடைக்கும்.