ருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத்தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது.
இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
ருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
நெல்லிக்காய் அளவுள்ள ருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்யமம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத ருத்திராட்சங்கள்.
ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், சம முத்துகள் போன்றதுமான ருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.
இனி ருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக ருத்திராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.
இருமுக ருத்திராட்சம் அர்த்தநரீஸ்வரன் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
மும்முக ருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
நான்கு முக ருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
ஐந்து முக ருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
ஆறுமுக ருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.
அறுமுக ருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
ஏழு முக ருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
எட்டு முக ருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரீதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.
ஒன்பது முக ருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
பத்துமுக ருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் முக்தி ஏற்படும்.
பதினொரு முக ருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
பன்னிரண்டு முக ருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
பதின்மூன்று ருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக ருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
108 ருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.
ருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால்
அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.
ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச்
சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட ருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற
மானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் ருத்திராட்சத்தை அணியலாம். ருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும்.
பிறப்பு – இறப்பு தீட்டுக்காலங்களில் ருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க ருத்திராட்சத்தை
அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.
ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் ?ருத்ராட்சம் அணிந்தால் என்ன கிடைக்கும் நன்மை?
ருத்ராட்சம் அணியவேண்டும் என்ற எண்ணம் தோன்ற காரணமே ஈசன் கருணை தான், நம்மிள் உள்ள பலவிதமான குறைகளை சரி செய்து நம்மையும் ஆட்கொள்ள வேண்டி தான், கருணைக்கடலான எம்பெருமான் ஈசன் நமக்கு அந்த எண்ணம் தோன்ற வைத்தார்.
உலகில் எத்தனையோ பேர் இருக்க நம்மை போல் சிலருக்கு மட்டும் இந்த எண்ணம் வர காரணம் ஈசன் கருணை மட்டுமே.
ருத்ராட்சதில் ஒரு அதிர்வலை ஓடிக்கொண்டு இருக்கிறது, அதை நாம் அணியும்போது நமது உடலிலும், அதன் தாக்கம் வெளிப்பட்டு நமது உடலில் NEGATIVE ENERGY – POSITIVE ENERGY ஆகா மாற்றுகிறது.
ருத்ராட்சம் அணிந்தால் யமக்கு கிட்டியது
1. ருத்ராட்சதை உடலில் உணரும்போது சிவ சிந்தனைகள் எழும்.
2. மற்றவர்கள் நம்மை பார்க்கும் நோக்கம் நம்மை பாதிக்காது.
3. எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
4. ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆழ்ந்து நோக்கும் தன்மை.
5. நிதானமாகவும் தெளிவாகவும் செய்யும் திறன்.
6. வேண்டாத பழக்கம் நம்மை விட்டு தாமே விலகும் நிலை.
7. எதிலும் ஒரு திருப்தி.
8. நம்மை வழிநடத்த பல உணர்வுகள்.
9. நாம் நிலைமை மேன்மை அடையும் உணர்வு.
1௦. பிறர்க்கு உதவும் மனப்பான்மை.
11. நமக்கு துன்பம் என்று வரும்போது அதை களைய உடனே உதவி,
தீமைகள் அணுகாது, துன்பம் வரும் முன் உணரும் தன்மை என்று பல பல,
## உலகிலே தீட்டு ஆனா இடம் நாம் பெருமான் இருக்கும் சுடுகாடு, ஆதலால் ருத்ராட்சம் அணிய எந்த ஒரு தீட்டும் இல்லை, ஆண் பெண் அலி என்று எந்த பேதமும் இல்லாதவன் நாம் கருணை கடவுள் ஆதலால் அனைவரும் அணியலாம்,
ஈசன் திருவருளால் மட்டுமே தோன்றிய பதிவு – யாருக்கு உணர்த்த என்று ஈசன் மட்டுமே அறிவான்.
No comments:
Post a Comment